4 மாதங்களுக்கு பின் புத்துணர்ச்சியுடன் தாயகம் திரும்பிய மதுரவீரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுரவீரன்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இயக்குனர் பாலாவின் உதவியாளர் பாலாசத்யா என்பவர் இயக்கத்தில் உருவாகும் படம் ஒன்றில் சண்முகப்பாண்டியன் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க ஆக்சன் படம் மற்றும் இந்திய ராணுவத்தை குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிக்க சண்முகப்பாண்டியனுக்கு உடல் பிட்னெஸ் தேவைப்பட்டது.
இதனையடுத்து அமெரிக்கா சென்ற சண்முகப்பாண்டியன் கடந்த நான்கு மாதங்களாக அனுபவம் உள்ள பயிற்சியாளர்களின் மேற்பார்வையில் உடல் பிட்னெஸ் பெற்று தற்போது நாடு திரும்பியுள்ளார். புத்துணர்ச்சியுடன் திரும்பி வந்த சண்முகப்பாண்டியன் தனது தந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் சமீபத்தில் சண்முகப்பாண்டியன் தனது தந்தையின் கண்களை தனது கையில் டாட்டுவாக வரைந்திருந்தார் என்பது தெரிந்ததே. அந்த டாட்டுவும் சண்முகப்பாண்டியன் வெளியிட்ட புகைப்படத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout