5 வருடங்களுக்கு பின் புத்துயிர் பெறும் விஜய் டிவி நிகழ்ச்சி.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் பங்கேற்பு..!
- IndiaGlitz, [Sunday,March 17 2024]
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் ’குக் வித் கோமாளி’ சீசன் 5 ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து நடுவர், தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் திடீரென விலகியதால் அடுத்த சீசன் தாமதம் ஆகி வருகிறது. இருப்பினும் இன்னும் ஒரு சில மாதங்களில் ’குக் வித் கோமாளி’ சீசன் 5 ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் தாமதம் காரணமாக ஐந்து வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி ஒன்றின் அடுத்த சீசன் தற்போது ஆரம்பமாக உள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ’அது இது எது’. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனை சிவகார்த்திகேயன் , இரண்டாவது சீசனை மாகாபா ஆனந்த் ஆகியோர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா, இரண்டாவது இடம் பெற்ற மணி சந்திரா மற்றும் கூல் சுரேஷ் ஆகிய மூவரும் முதல் எபிசோடில் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் தெரிகிறது. மேலும் இந்த சீசனை குரேஷி தொகுத்து வழங்குவார் என தெரிகிறது.
வரும் மார்ச் 24ஆம் தேதி முதல் ’அது இது எது’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டதை அடுத்து விஜய் டிவி பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.