முதல் சீசனை அடுத்து 7வது சீசனில் தான்.. சுவர் ஏறி குதிக்க முயன்ற போட்டியாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக இருந்த பரணி சுவரேறி குதிக்க முயன்ற நிலையில் அதன் பிறகு ஏழாவது சீசனில் ஒரு போட்டியாளர் சுவரேறி குதிக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் 7வது சீசன் கடந்த 70 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டிருப்பதால் கூடுதல் விறுவிறுப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டின் ஞாபகம் வந்துவிட்டது என்றும், தான் வீட்டிற்கு போக வேண்டும் என்றும் தன்னை நாமினேட் செய்து வெளியேற்றுமாறு கூல் சுரேஷ் கூறிக்கொண்டிருந்தார். அதன்படியே அவர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த வாரம் இரண்டு அல்லது மூன்று போட்டியாளர்கள் எவிக்சன் செய்யப்பட்டால் அதில் கூல் சுரேஷ் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை வரை பிக் பாஸ் வீட்டில் இருக்க பொறுமை இல்லாத கூல் சுரேஷ் திடீரென சுவரேறி குதிக்க முயலும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அவரால் ஒரு அளவுக்கு மேல் ஏற முடியவில்லை. இந்த நிலையில் கூல் சுரேஷ் சுவரேறி கொண்டிருப்பதை பார்த்த கேப்டன் மணி உடனடியாக ஓடி வந்து அவரை கீழே இறங்குமாறு கூறினார்.
இதனை அடுத்து கூல் சுரேஷை கன்ஃபெக்சன் ரூமுக்கு அழைத்த பிக் பாஸ் அவரை கண்டித்தார். சிறிது நேரம் அழுத கூல் சுரேஷ், இனிமேல் இது போன்று செய்ய மாட்டேன் என்று கூறினார் முதல் சீசனை அடுத்து ஏழாவது சீசனில் மீண்டும் ஒரு போட்டியாளர் சுவரேறி குதிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#CoolSuresh try to escape .this week no elimination cool suresh self eviction. pic.twitter.com/hZqh8RDuwP
— Jin (@Jin49486319) December 13, 2023
#Biggboss To #Coolsuresh - Porumaiya Irunga#BiggBossTamil7 #BiggBossTamil #BiggBoss7Tamil #BiggBossSeason7 #BBTamilSeason7 #BiggBoss7 #BiggBosspic.twitter.com/z9NPoFLh0g
— Bigg Boss Tamil (@letsentertainz) December 13, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com