பகத் பாசிலை அடுத்து 'விக்ரம்' படத்தில் இணைந்த மேலும் ஒரு மலையாள நடிகர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படமான ‘விக்ரம்’ குறித்து அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் முதலில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது. அதன் பின்னர் பிரபல மலையாள நடிகரான பகத் பாசில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு மலையாள நடிகரான ஆண்டனி வர்கீஸ் இணைந்து இருப்பதாகவும் இவருக்கு ஒரு முக்கிய கேரக்டர் இந்த படத்தில் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆண்டனி வர்கீஸ் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சமயத்தில் அவரிடம் கால்ஷீட் இல்லை என்பதால் அந்த படத்தை அவர் மிஸ் செய்தார். இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படமான ‘விக்ரம்’ படத்தில் அவர் இடம்பெற்றுள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
அங்கமாலி டைரி’ உள்பட ஒருசில மலையாள படங்களில் நடித்துள்ள ஆண்டனி வர்கீஸ் ‘விக்ரம்’ படத்தில் இணைந்து இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது தெரிந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout