பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் மகேஸ்வரியின் முதல் வீடியோ: என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று குறைந்த வாக்குகளின் அடிப்படையில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று வெளியேறியவுடன் கமல்ஹாசனிடம் பேசிய மகேஸ்வரி ’தான் இந்த வீட்டில் இருக்கும் போது ஒவ்வொரு நாளும் நான் நானாகவே இருந்தேன் என்றும் கேமராவுக்காக நடிக்கவில்லை என்றும் உங்களிடம் ஒவ்வொரு வாரமும் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப் பெரிய மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து கமல்ஹாசன் ’உங்களுக்கு வெளியே ஒரு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று வாழ்த்துக் கூறி அனுப்பினார்.
இந்த நிலையில் மகேஸ்வரி பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
’நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. நான் 100% என்னுடைய விளையாட்டை கொடுத்தேன். வெளியே வந்தவுடன் தான் தெரிகிறது, எனக்கு எவ்வளவு பெரிய சப்போர்ட் இருந்திருக்கின்றது என்று. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. நான் என்னுடைய கேமை சரியாகத்தான் விளையாடினேன் என்று நினைக்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இதேபோல் எனக்கு தொடர்ந்து அன்பை செலுத்துங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
#BiggBossTamil6 #VjMaheshwari Her exit was too graceful no drama and she is with full of positivity she is fully satisfied with her game pic.twitter.com/sdKcE8UEau
— Dexter, (@Dexterbb6war) November 13, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com