பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் கூல் சுரேஷ் சந்தித்தது இந்த நடிகரைத்தான்: வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,December 20 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஃபினாலேவுக்கு செல்ல போட்டியாளர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் முடிந்தவுடன் அடுத்த வாரம் முதல் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த ஞாயிறு அன்று வெளியே வந்த கூல் சுரேஷ் முதன்முதலாக பிரபல நடிகரை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சுரேஷ் நடிகராக கடந்த 2001 ஆம் ஆண்டு அறிமுகமானார் என்றாலும் அதன் பிறகு அவர் சிம்பு மற்றும் சந்தானம் படங்களில் நடித்தார். இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளாக அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சந்தானத்தை பார்த்துள்ளார். சந்தானம் அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இனி வரும் சந்தானம் படங்களில் கூல் சுரேஷ்க்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ரக்சிதாவை எதிர்பார்த்த தினேஷ்.. ஆனால் வந்தது யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருப்பதால் செண்டிமெண்டாக சென்று கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தினேஷ்

சிம்புவின் 'வல்லவன்' ரீரிலீஸ் படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்.. அன்-கட் வெர்ஷனா?

சிம்பு நடித்து இயக்கிய 'வல்லவன்' திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.  

விஷ்ணுவோட அக்கா என்னை முறை முறைன்னு முறைக்கிறாங்க.. 3 போட்டியாளர்கள் புலம்பல்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்ற நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்தோம்.

'தங்கலான்' புதிய ரிலீஸ் தேதி இதுவா? 3 நாட்கள் தொடர் விடுமுறையால் குஷி..!

விக்ரம் நடித்த  'தங்கலான்' திரைப்படம் ஜனவரி இறுதியில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் செய்து தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இவங்க மொறைக்கிறாங்க.. என்னை அடிப்பாங்கன்னு நினைக்கிறேன்: விஷ்ணு உறவினர் குறித்து பூர்ணிமா

நான் விஷ்ணுவிடம் சரியாக பேசியதே இல்லை என்று பூர்ணிமா கூற அதற்கு விஷ்ணுவின் உறவினர் முறைக்க 'இவங்க என்ன அடிப்பார்கள் என்று நினைக்கிறேன்,