வெளியே வந்த பின்னும் தொடரும் மாயா கேங் நட்பு.. ரெட் கார்டு பிரண்ட்ஸ் என நெட்டிசன்கள் விமர்சனம்..!

  • IndiaGlitz, [Tuesday,January 02 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு கேங்குகளாக பிரிந்து போட்டியாளர்கள் விளையாடி வருவதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டிய பின்னரும் குழுவாக தான் தற்போதும் விளையாடி வருகின்றனர் என்பதும் கடைசி வரை இந்த சீசனில் கேங் என்பது பிரிக்க முடியாததாகத்தான் இருக்கும் என்று தான் தெரிகிறது.

மாயா, பூர்ணிமா, விசித்ரா, நிக்சன், விஜய் வர்மா ஒரு கேங்காகவும், தினேஷ், மணி, ரவீனா, விஷ்ணு ஒரு கேங்காகவும் விளையாடி வரும் நிலையில் கடந்த வாரம் இரண்டு கேங்கில் இருந்தும் தலா ஒருவர் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது மட்டுமின்றி வெளியே வந்த பின்னரும் இந்த கேங்கின் நட்பு தொடர்கிறது என்பது சமீபத்தில் வைரலாகி வரும் புகைப்படத்தில் இருந்து தெரிய வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜோவிகா, நிக்சன் மற்றும் விக்ரம் சரவணன் ஆகிய மூவரும் இணைந்து எடுத்த செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து வெளியே வந்த பின்னரும் நட்பு தொடர்கிறது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் பிரதீப் ரங்கநாதனுக்கு எதிராக ரெக்கார்ட் கொடுத்த அனைவரும் வெளியே வந்த பின்னரும் நண்பர்களாக தொடர்கின்றனர் என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.