மூழ்காத ஷிப்பா ஃப்ரெண்ட்ஷிப்: வெளியே போயும் தொடரும் அன்பு குரூப்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையில் ரியோ, நிஷா, சோம், கேபி, ரமேஷ் ஆகிய 6 பேர் அன்பு குரூப்பாக இருந்து விளையாடினர் என்றும் அவர்கள் 6 பேரும் இணைந்து தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை வெளியேற்றியதாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த குற்றச்சாட்டை அர்ச்சனாவும், அவருடைய ஆதரவாளர்களும் மறுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அர்ச்சனாவின் அன்பு குரூப் அதிரடியாக உடைக்கப்பட்டு நிஷா, ரமேஷ் மற்றும் அர்ச்சனா ஆகிய மூவரும் கடந்த இரண்டு வாரங்களில் வெளியேறினார்கள். இந்த நிலையில் அன்பு குரூப்பில் உள்ள மீதமுள்ள ரியோ, சோம் மற்றும் கேபி ஆகியோர் தற்போதும் பிக்பாஸ் வீட்டில் அன்பு குரூப்பாகவே இருந்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அன்பு குரூப்பைச் சேர்ந்த அர்ச்சனா நிஷா மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அர்ச்சனா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த பதவியில் அவர் கூறியிருப்பதாவது: எங்கள் வாழ்க்கையில் நாங்கள் உருவாக்கிய நட்பின் பிணைப்புகள் கடினமான தடைகளை கூட எளிதில் கடந்து செல்ல உதவுகின்றன என்று குறிப்பிட்டு மூழ்காத ஷிப்பா ப்ரெண்ட்ஷி’ என்று பதிவு செய்துள்ளார்.
அர்ச்சனாவின் இந்த பதிவுக்கு பல்வேறு கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன. வெளியே சென்ற பின்னரும் நட்பையும் அன்பையும் தொடருங்கள் என்று ரசிகர்கள் வாழ்த்து கூறி வரும் நிலையில் ஒரு சிலர் ’கடவுள் இருக்கான் குமாரு’ என்றும் ’அன்பு கேங்’ என்றும் ’இந்த குரூப்பில் வேல்முருகன் மிஸ்ஸிங்’ என்றும் கமெண்ட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com