பிக்பாஸ் தர்ஷனின் முதல் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று தர்ஷன் எதிர்பாராத வகையில் வெளியேறினார். எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் பிக்பாஸ், தர்ஷன் வெளியேற்றம் என்ற ஷாக் ட்ரீட்மெண்டை ஆடியன்ஸ்களுக்கு நேற்று கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தர்ஷன், மக்களின் பெரும் வரவேற்பை பார்த்து உண்மையில் திக்குமுக்காடி போனார். நூறு நாட்களுக்கு முன் தர்ஷன் என்றால் யார் என்றே தெரியாது. ஆனால் இன்று அவர் கோடிக்கணக்கான மக்களின் மனதில் குடிகொண்டுள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் தர்ஷன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதாவது: ‘நமக்கு பழக்கம் இல்லாதவர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். அதுபோல தான் நீங்கள் அனைவரும் என் மீது காட்டிய அன்புக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி. இந்த 98 நாட்களும் என்னை உங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து அன்பு காட்டியதற்கு நன்றி. இது தான் என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. உங்களை விரைவில் சந்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தர்ஷனுக்கு விரைவில் கோலிவுட் திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

View this post on Instagram

Love you all ❤️

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on Sep 29, 2019 at 1:21pm PDT