ரஜினியின் எந்திரனுக்கு அடுத்த இடத்தை பெற்ற ஜெயம் ரவியின் 'மிருதன்'

  • IndiaGlitz, [Saturday,May 07 2016]
கனடாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் Fantasia International Film Festival திரைப்பட விழா திரைப்பட கலைஞர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விழாவாக கருதப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நடைபெறும் இந்த திரைப்பட விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ள ஜெயம் ரவி, லட்சுமிமேனன் நடிப்பில் சக்தி செளந்திரராஜன் இயக்கிய மிருதன் தேர்வு பெற்றுள்ளது. இந்த தகவலை ஜெயம் ரவி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த விழாவில் கலந்து கொண்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்ற படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படம் என்பது குறிப்பிடத்தக்கது. 'எந்திரன்' படத்திற்கு பின்னர் இந்த விழாவில் கலந்து கொள்ளும் இரண்டாவது தமிழ்ப்படம் 'மிருதன்' என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நான் ஒரு சென்னை பொறுக்கி. விஜய் வில்லன் பேட்டி

கோலிவுட்டின் புதிய வில்லனாக உருவெடுத்து வருபவர் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'லிங்கா'...

இன்று முதல் '24' படத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்

சூர்யா நடித்த '24' திரைப்படம் நேற்று வெளியாகி உலகம் முழுவதும் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளது...

முதல் பேயுடன் இணையும் ராகவா லாரன்ஸ்

சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் 'ரஜினிமுருகன்' படத்தில் முக்கிய வேடம் ஏற்று அனைவரின் மனதை கவர்ந்த நடிகர் ராஜ்கிரண் என்பது அனைவரும் அறிந்ததே...

அடுத்தடுத்து இசைவிருந்து தரவுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் - அனிருத்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளம் இசைப்புயல் அனிருத் ஆகியோர் இசையமைத்த படங்களின் பாடல்கள் வெளியீடு...

காதல் மனைவியை விவாகரத்து செய்தார் பாலாஜி மோகன்

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன், தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்...