நல்லவேளை, எனக்கு அன்பான குடும்பம் இருந்ததால் தப்பித்தேன்: எவிக்சனுக்கு பிறகு அபினய் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நல்லவேளை எனக்கு அன்பான குடும்பம் இருந்ததால் நான் தப்பித்தேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபினய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபினய் 78வது நாளில் எலிமினேட் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. அவரது எலிமினேஷனுக்கு முக்கிய காரணமாக பாவனியுடனான காதல் என்றும், அந்த விஷயத்தில் அவரது கருத்து வலுவானதாக இல்லை என்றும் கமல்ஹாசனே அவரை விமர்சனம் செய்யும் அளவுக்கு அந்த பிரச்சனை பெரிதாகியது என்பதும், அதன்பின் ஒருவழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபினய் பதிவு செய்துள்ளதாவது: போலியில் இருந்து நிஜத்திற்கும் உங்கள் அன்பிற்கும் நான் மீண்டும் திரும்பி உள்ளேன். நீங்கள் ஒவ்வொருவரும் அளித்த அன்பு மற்றும் ஆதரவு தான் நான் 78 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பயணிக்க வைத்தது. இந்த பயணத்தில் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
வாழ்க்கையில் எதுவாக இருந்தாலும் நாம் தேர்வு வழிதான் நம்முடைய வாழ்க்கையை நல்ல பாதைக்கு கொண்டு செல்லும். இந்த நிகழ்ச்சியில் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றாலும் அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல அன்பான குடும்பம் இருந்ததால் நான் தப்பித்து உள்ளேன். அவர்கள் எப்போதும் என்னுடைய ஏற்றத்தாழ்வுகளின்போது தாங்கிப் பிடித்து உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நான் தவறாக காட்டப்பட்டிருந்தாலும், தவறாக என்னை பற்றி காட்சிகள் இருந்தாலும் இது ஒரு கேம் ஷோ தான் என்று என்னுடைய குடும்பத்தினர் எனக்கு ஆறுதல் கூறினார்கள்.
பிக்பாஸ் வீட்டில் என்னுடைய பயணம் முடிந்து விட்டது. என்னை முழுதாக நம்பிய எனது குடும்பத்திற்கு நன்றி. எப்போதும் எனக்கு நம்பிக்கை கொடுத்து, எனக்கு ஆதரவாக நின்று உள்ளனர். என்னை ஆதரித்து எனக்கு ஊக்கமளித்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இந்த பயணத்தில் என்னுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. இந்த அன்பை எப்போதும் நான் மறக்க மாட்டேன். நல்ல பாஸிட்டிவ் விஷயங்களின் துவக்கமாக நான் இந்த நிகழ்ச்சியை கருதுகிறேன்’ என்று அவனை குறிப்பிட்டுள்ளார். அபினய்யின் இந்த பதிவுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com