மின்கட்டண உயர்வை அடுத்து 2 மடங்கு உயர்த்தப்பட்ட சேவை கட்டணம்: முழு விவரங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் சமீபத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்த நிலையில் தற்போது கூடுதல் அதிர்ச்சியாக புதிய மின் இணைப்பு மற்றும் சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது என்பதும் இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன
இந்தநிலையில் புதிய மின் இணைப்பு பெறுதல் மற்றும் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீட்டு கட்டணம், வளர்ச்சி கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் இந்த கட்டணங்கள் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணங்களில் இருந்து சுமார் இரு மடங்கு உயர்த்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
மின்கம்பங்கள் மூலம் மின்சாரம் வினியோகிக்க பகுதிகளில் உயர்த்தப்பட்ட கட்டணங்களின் விவரங்கள்
காப்பீடு கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.750 என உயர்வு
இணைப்பு கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 என உயர்வு
பதிவுக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.200 என உயர்வு
வளர்ச்சிக் கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.2,800 என உயர்வு
வைப்புத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 என உயர்வு
பூமிக்கு அடியில் கேபிள் வழியாக மின் விநியோகம் நடைபெறும் பகுதிகளில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு விவரங்கள்:
ஒருமுனை மின் இணைப்புக்கான பதிவுக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.200 என உயர்வு
வளர்ச்சிக் கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் என உயர்வு
இணைப்புக் கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 என உயர்வு
மீட்டர் காப்பீடு கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.750 என உயர்வு
வைப்புத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 என உயர்வு
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மின் கட்டண விவரங்கள்
ஒருமுனை மின் இணைப்புக்கு மீட்டர் வைப்புத் தொகையாக ரூ.5,200
மும்முனை மின்இணைப்புக்கு ரூ.7,100-ம் கூடுதல்
வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.600 என உயர்வு
பழுதடைந்த மீட்டரை மாற்ற கட்டண உயர்வு
பழுதடைந்த மீட்டரை மாற்றுவதற்கான கட்டணம் ஒருமுனை மின்இணைப்புக்கு ரூ.500-ல்இருந்து 1000 ரூபாய் என உயர்வு என்றும் மும்முனை மின்இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1,500 என உயர்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மின் மீட்டரை இடமாற்றம் செய்ய கட்டண உயர்வு
ஒருமுனை மின்இணைப்பு மீட்டரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்ற கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 என உயர்வு எனவும் மும்முனை இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1,500 என உயர்வு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com