துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளியை அடுத்து இன்னொரு நாயகி.. தனுஷ் வெளியிட்ட 'ராயன்' போஸ்டர்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தனுஷ் நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தில் ஏற்கனவே துஷாரா விஜயன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய இருவரும் நடித்துள்ள நிலையில் தற்போது இன்னொரு நாயகியும் நடித்துள்ளதாக சற்றுமுன் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
தனுஷ் நடித்து இயக்கி வரும் ‘ராயன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் ஆகியோர்களின் போஸ்டர்களை தனுஷ் வரிசையாக வெளியிட்டு வருகிறார்.
அதேபோல் இந்த படத்தில் நாயகிகளாக நடித்த துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி போஸ்டர்களையும் கடந்த இரண்டு நாட்களாக தனுஷ் வெளியிட்டார். இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளதாக கூறியுள்ள தனுஷ் அவருடைய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். வழக்கம்போல் இந்த போஸ்டரும் கருப்பு வெள்ளையில் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இன்னும் யார் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள் என்பதை அறிய மிகவும் ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்த படம் தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
@varusarath5 from Raayan pic.twitter.com/p4ezzrFpmL
— Dhanush (@dhanushkraja) February 26, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments