துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளியை அடுத்து இன்னொரு நாயகி.. தனுஷ் வெளியிட்ட 'ராயன்' போஸ்டர்..!

  • IndiaGlitz, [Monday,February 26 2024]

தனுஷ் நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தில் ஏற்கனவே துஷாரா விஜயன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய இருவரும் நடித்துள்ள நிலையில் தற்போது இன்னொரு நாயகியும் நடித்துள்ளதாக சற்றுமுன் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

தனுஷ் நடித்து இயக்கி வரும் ‘ராயன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் ஆகியோர்களின் போஸ்டர்களை தனுஷ் வரிசையாக வெளியிட்டு வருகிறார்.

அதேபோல் இந்த படத்தில் நாயகிகளாக நடித்த துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி போஸ்டர்களையும் கடந்த இரண்டு நாட்களாக தனுஷ் வெளியிட்டார். இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளதாக கூறியுள்ள தனுஷ் அவருடைய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். வழக்கம்போல் இந்த போஸ்டரும் கருப்பு வெள்ளையில் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இன்னும் யார் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள் என்பதை அறிய மிகவும் ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்த படம் தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

அஜித், சூர்யா பட தயாரிப்பாளர் திடீர் கைது.. திரையுலகில் பரபரப்பு..!

அஜித், சூர்யா உட்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெருங்கிய நண்பர் இயக்கும் படத்தில் கவின்.. இணையும் சிவகார்த்திகேயன் பட நாயகி..!

'டாடா' என்ற ஒரே திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்தடுத்து கவினுக்கு தமிழ் திரை உலகில் வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் தற்போது அவருடைய நெருங்கிய நண்பர் இயக்கும்

'தனி ஒருவன் 2' படத்தை அடுத்து இன்னொரு 2ஆம் பாக திரைப்படம்.. மோகன் ராஜா மாஸ் திட்டம்..!

மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து

ரஜினி, கமல் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரபலத்தின் பயோபிக் திரைப்படம்.. மாஸ் தகவல்..!

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் அவ்வப்போது சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இருவரும் ஒரே படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த சகோதரி பவதாரிணியின் த்ரோபேக் புகைப்படத்தை பகிர்ந்த யுவன்.. ரசிகர்கள் ஆறுதல்..!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சமீபத்தில் காலமான நிலையில் அவருடைய சகோதரர் யுவன் சங்கர் ராஜா தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்