இனிமேல் என்ன செய்ய வேண்டும்: விவாகரத்து அறிவிப்புக்கு பின் சமந்தாவின் பதிவு!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அந்த பதிவில் ’நான் உலகை மாற்ற வேண்டும் என்று விரும்பினால் முதலில் என்னை நான் மாற்றிக் கொள்ள வேண்டும். இனிமேல் என் படுக்கையை நான் உருவாக்க வேண்டும். அலமாரியை தூசு தட்ட வேண்டும். மதியம் வரை படுக்கையில் படுக்க கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்ற விஷயங்களைப் பற்றி கனவு காண்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் Dream & Alec Benjamin அவர்களின் Change My Clothes என்ற பாடல் வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை சமந்தா, விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ‘சாகுந்தலம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)