டிஸ்சார்ஜ் ஆனதும் படப்பிடிப்புக்கு செல்லும் பாரதிராஜா? எந்த படம் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று கூறப்படும் நிலையில் அவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வள்ளி மயில்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில் கூறியிருப்பதாவது: எங்களின் ’வள்ளி மயில்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்கி உள்ளோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 32 நாட்கள் திண்டுக்கல், மதுரை, தென்காசி போன்ற பகுதிகளில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
நேற்று பாரதிராஜா அப்பாவை மருத்துவமனையில் சந்தித்து பேசினேன். இம்மாத இறுதிக்குள் எங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறினார். மீண்டும் பாரதிராஜாவுடன் பணியாற்ற மிகுந்த ஆவலுடன் உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு, கென்னடி கிளப், ஈஸ்வரன், குற்றம் குற்றமே உட்பட ஒரு சில படங்களில் பாரதிராஜா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments