டிஸ்சார்ஜ் ஆனதும் படப்பிடிப்புக்கு செல்லும் பாரதிராஜா? எந்த படம் தெரியுமா?

இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று கூறப்படும் நிலையில் அவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வள்ளி மயில்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில் கூறியிருப்பதாவது: எங்களின் ’வள்ளி மயில்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்கி உள்ளோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 32 நாட்கள் திண்டுக்கல், மதுரை, தென்காசி போன்ற பகுதிகளில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

நேற்று பாரதிராஜா அப்பாவை மருத்துவமனையில் சந்தித்து பேசினேன். இம்மாத இறுதிக்குள் எங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறினார். மீண்டும் பாரதிராஜாவுடன் பணியாற்ற மிகுந்த ஆவலுடன் உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு, கென்னடி கிளப், ஈஸ்வரன், குற்றம் குற்றமே உட்பட ஒரு சில படங்களில் பாரதிராஜா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: கெளதம் மேனன்

சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இந்த விழாவில் பேசிய இயக்குனர் கௌதம் மேனன் சிம்புவை வைத்து முதலில் படமாக்க திட்டமிட்டு இருந்தது

இந்த ஒரு நம்பிக்கையில தான் கவுதம் மேனன் படத்துக்கு ஒப்புக்கொண்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் இசைப்புயல்

'எனக்கு அடுத்தது நீதான் தலைவன்னு சொன்னா, என்னை கொன்னுடுவியா? 'வெந்து தணிந்தது காடு' டிரைலர்

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமாக நடந்தது

சிவகார்த்திகேயனின் 'டான்' வசூல்: தமிழ் சினிமா இதுவரை செய்யாத சாதனை!

 தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான 'டான்' படத்தின் வசூல் சாதனை செய்துள்ளது என்ற தகவல் பெரும்

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.75 மட்டுமே டிக்கெட் கட்டணம்: அதிரடி அறிவிப்பு!

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 75 ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணம் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.