இயக்கம், நடிப்பை அடுத்து இன்னொரு அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,November 27 2023]

தமிழ் திரை உலகில் 5 திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ஓரிரு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இயக்கம், நடிப்பை அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’மாநகரம்’ ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ மற்றும் ’லியோ’ ஆகிய ஐந்து திரைப்படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இதனை அடுத்து ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள ’சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்துள்ள லோகேஷ், அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்தில் அனிருத் உடன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்கம், நடிப்பை அடுத்து லோகேஷ் கனகராஜ், G Squad என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வாய்ப்பளிக்க போவதாகவும் முதல் படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாக இருக்கும் முதல் படம் குறித்து அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.