சிஎஸ்கேவின் தோல்விக்கு தோனியே காரணம்… கடுமையாக விமர்சித்த மூத்த வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் சீசன் லீக் போட்டிகளில் சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அணியின் தடுமாற்றத்திற்கு தோனியே முக்கியக் காரணம், ஜடேஜாவிற்கு பதிலாக மற்றொருவரைத்தான் அவர் கேப்டனாக நியமித்திருக்க வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் அணிக்கு முன்னாள் பயிற்சியாளராக இருந்துவந்த ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
ஐபிஎல் 15 ஆவது சீசன் தொடருக்கான லீக் போட்டியில் இதுவரை சிஎஸ்கே ஆடிய 4 போட்டிகளிலும் தோல்வியையே தழுவியது. இதற்கு அணியில் மொயின் அலி இல்லை, தீபக் சாஹர் இல்லை, ருதுராஜ் கெயிக்வாட் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார் என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதனால் சிஎஸ்கே தகுதிச்சுற்றுப் போட்டிக்குள் நுழைவதே தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்நிலையில் சிஎஸ்கேவின் இந்த நிலைமைக்கு தோனியே முக்கியக் காரணம் என்று முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். காரணம் தோனி 40 வயதில் கேப்டன் பதவியை விட்டு விலகியது சரிதான். ஆனால் அவர் பதவி விலகுவதாக இருந்தால் டூபிளசியை அணிக்குள் வைத்திருக்க முயற்சித்து இருக்க வேண்டும். ஒரு மூத்த வீரர் என்ற முறையில் அவர் அணியை வழி நடத்தியிருப்பார். தற்போது ஜடேஜாவை நியமித்திருப்பதால் அவருக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு முறையான பேட்டிங்கிலும் அவரால் ஈடுபட முடியவில்லை. சிறந்த பினிஷர் என்று கருதப்பட்ட அவரே தற்போது தடுமாறுகிறார்.
தொடர்ந்து பேசியி ரவிசாஸ்திரி, சிஎஸ்கேவின் தோல்விக்கு பிளேயிங் 11 காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் பிளேயிங் 11 பொறுத்தவரை சிறப்பானதாகவே இருக்கிறது. தோனியின் தவறான முடிவுதான் தொடர் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். சிஎஸ்கேவின் 12 சீசன் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த தோனி 11 முறை அந்த அணியைத் தகுதிச்சுற்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மேலும் 4 முறை சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். தற்போது 15 ஆவது சீசன் போட்டியில் அணியை ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.
சிறந்த பேட்ஸ்மேனாக இருந்துவரும் ஜடேஜா இதுவரை எந்த பெரிய அணிக்கும் கேப்டனாக இருந்ததே இல்லை. இதற்கு முன்பு கடந்த 2007 இல் அண்டர் 19 அணிக்கு சிறிது காலம் கேப்டனாக இருந்துள்ளார். மேலும் கடந்த சீசன் போட்டிகளிலும் சிறந்த பினிஷர் அவதாரம் எடுத்த அவர் தற்போது கேப்டனான பிறகு பேட்டிங்கிலும் சொதப்பி வருகிறார். இந்தப் பின்னணியில்தான் ஜடேஜாவின் கேப்டன்சி குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com