தோனி, சச்சினை அடுத்து இன்னொரு கிரிக்கெட் வீரரின் பயோகிராபி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,August 20 2024]

இந்திய கிரிக்கெட் வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் என்பதும் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் டீ சீரிஸ் என்ற நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் யுவராஜ்சிங் கேரக்டரில் நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை செய்துள்ள யுவராஜ் சிங், ஒரே ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து சாதனை செய்தவர் என்பதும் கண்டிப்பாக இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இந்த சாதனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More News

'வேட்டையன்' 'விடாமுயற்சி' அப்டேட்.. ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'வேட்டையன்' மற்றும் அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்து வரும் லைக்கா நிறுவனம்

திருத்தணி முருகன் கோவில்: சீதா சுரேஷ் அவர்கள் விளக்கும் ரகசியங்கள்!

பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் திருத்தணி முருகன் கோவிலின் ஆழமான ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார்.

புரோட்டா மாஸ்டர் கேரக்டரில் விஜய் சேதுபதி.. ஜோடியாகும் நித்யா மேனன்.. இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி ஒரு திரைப்படத்தில் புரோட்டா மாஸ்டராக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

கேப்டன் வீட்டிற்கு திடீர் விசிட் செய்த தளபதி விஜய்.. ஏஐ காட்சிகள் குறித்து ஆலோசனையா?

தளபதி விஜய் நேற்று மறைந்த கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ZEE5 இன் மலையாள ஆந்தாலஜி தொகுப்பு  'மனோரதங்கள்' வெளியீட்டு விழா.. மோகன்லால் பங்கேற்பு..!

ZEE5 இன் 'மனோரதங்கள்,' மலையாள சினிமாவின் சிறந்த திறமைகளை முன்னிலைப்படுத்தும் ஒன்பது வசீகரிக்கும் கதைகளுடன் M.T வாசுதேவன் நாயரின் கற்பனை உலகத்துக்கான பயணமாக அமைந்துள்ளது.