'குக் வித் கோமாளி' தர்ஷாவை அடுத்து களத்தில் இறங்கிய பிக்பாஸ் ஆரி: வைரல் புகைப்படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
’குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கடந்த சில நாட்களாக ஊரடங்கு நேரத்தில் சாலையோரம் உணவின்றி கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார். தினந்தோறும் அவர் குறிப்பிட்ட சிலருக்கு உணவு வழங்கி வருவதை வழக்கமாக கொண்டு உள்ளார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலானதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியும் களத்தில் இறங்கியுள்ளார். நேற்று அவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தார். அவர் நடத்தி வரும் ’மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளை மூலம் இந்த அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அன்னதான நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் உணவு வாங்கி சென்றனர். இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி தர்ஷா, பிக்பாஸ் ஆரியை அடுத்து மேலும் சில திரையுலக மற்றும் சின்னத்திரை உலக பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை இந்த ஊரடங்கு நேரத்தில் ஏழை எளிய மக்களுக்கு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com