'குக் வித் கோமாளி' தர்ஷாவை அடுத்து களத்தில் இறங்கிய பிக்பாஸ் ஆரி: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Saturday,June 12 2021]

’குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கடந்த சில நாட்களாக ஊரடங்கு நேரத்தில் சாலையோரம் உணவின்றி கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார். தினந்தோறும் அவர் குறிப்பிட்ட சிலருக்கு உணவு வழங்கி வருவதை வழக்கமாக கொண்டு உள்ளார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலானதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியும் களத்தில் இறங்கியுள்ளார். நேற்று அவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தார். அவர் நடத்தி வரும் ’மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளை மூலம் இந்த அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அன்னதான நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் உணவு வாங்கி சென்றனர். இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி தர்ஷா, பிக்பாஸ் ஆரியை அடுத்து மேலும் சில திரையுலக மற்றும் சின்னத்திரை உலக பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை இந்த ஊரடங்கு நேரத்தில் ஏழை எளிய மக்களுக்கு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஹாலிவுட் படத்தில் நடித்த த்ரில் அனுபவம்…  வலிமை பட நாயகி வெளியிட்ட வைரல் பதிவு!

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “வலிமை“ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

36 வருட பெஸ்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்… நடிகை குஷ்புவின் நெகிழ்ச்சி பதிவு!

80களில் இருந்து தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை குஷ்பு.

லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கின்றேனா? நடிகர் மாதவன் விளக்கம்!

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த 'ரன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அந்த படத்தில் இடம்பெற்ற ஷட்டர் காட்சி இன்றும் ரசிகர்கள் மனதில் நினைவில்

'குக் வித் கோமாளி' சீசன் 3 எப்போது? குட்டீஸ்களிடம் தகவல் சொன்ன புகழ்

'குக் வித் கோமாளி' சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய இரண்டுமே பெரிய அளவில் பிரபலமானது என்பதும் குறிப்பாக சீசன் 2 யாருமே எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அளவில், வேற லெவலில் பிரபலமானது

சம்யுக்தா-பாவனா நடனத்திற்கு செருப்பு வீசிய நபர்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டு வந்தபோது திடீரென ஆரியை பகைத்து கொண்டதால் அடுத்த வாரமே நிகழ்ச்சியில் இருந்து ரசிகர்களால்