தனுஷ் மகன் கேப்டன், துணை கேப்டன் இந்த நடிகரின் மகளா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியின் மகன் யாத்ரா படிக்கும் பள்ளியின் விளையாட்டு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிகழ்ச்சிக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பதும் இருவரும் இணைந்த புகைப்படம் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதே பள்ளியில் படிக்கும் இன்னொரு தமிழ் நடிகரின் மகள் ஜூனியர் விளையாட்டு அணிக்கு கேப்டனாகி உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் மகன் யாத்ரா சீனியர் விளையாட்டு அணிக்கு கேப்டன் ஆகியுள்ள நிலையில் நடிகர் எஸ்வி சேகரின் பேத்தியும் நடிகர் அஸ்வின் சேகரின் மகளுமான அர்னா சேகர் ஜூனியர் அணிக்கு கேப்டனாகி உள்ளார். இதனை எஸ் வி சேகர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து தனது பேத்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனுஷ் மகன் யாத்ரா மற்றும் அஸ்வின் மகள அர்னா ஆகிய இருவரும் தாங்கள் படிக்கும் பள்ளியின் விளையாட்டு குழுவில் கேப்டன் ஆகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments