தனுஷ் படத்தை அடுத்து சிம்பு படத்தின் இசை வெளியீடு.. தேதி இதுதானா?

  • IndiaGlitz, [Monday,February 06 2023]

தனுஷ் நடித்த 'வாத்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தனுஷ் படத்தை அடுத்து சிம்புவின் ’பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

‘பத்து தல’ படத்தின் ஆடியோ விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இதில் சில சிறப்பு விருந்தினங்களையும் அழைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிம்பு தற்போது தாய்லாந்தில் இருக்கும் நிலையில் அவர் ’பத்து தல’ படத்தின் ஆடியோ விழாவிற்கு முன்பாக சென்னை வந்து விடுவார் என்றும் அதுமட்டுமின்றி இந்த படத்தை இசையமைப்பாளர் இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் இந்த ஆடியோ விழாவில் சில பாடல்களை பாடுவார் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான ஆடியோ விழா விரைவில் நடைபெற உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை சூர்யா ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார். வரும் மார்ச் 30ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷூக்கு பாட்டு பாட கற்று கொடுக்கும் இசைஞானி.. க்யூட் வீடியோ..!

நடிகர் தனுஷூக்கு பாட சொல்லிக் கொடுக்கும் இசைஞானி இளையராஜாவின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'லியோ' படப்பிடிப்பு தளத்தில் பயங்கர குளிர்.. எத்தனை டிகிரி தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் அந்த வீடியோ பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை

விமானத்தில் படமாக்கப்பட்ட பயங்கர ஸ்டண்ட் காட்சி.. 'சூர்யா 42' படத்தின் மாஸ் தகவல்..!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்டுடியோ கிரீன்

சேலை காஸ்ட்யூமில் தேவயானி மகள்.. அதற்குள் இவ்வளவு பெரிய பெண்ணாகிவிட்டாரா?

 அஜித், விஜய் ஒரு பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த தேவயானியின் மகள் சேலை கட்டிய இளம் பெண் போன்ற தோற்றத்துடன் உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

மூன்றே நாளில் காஷ்மீரில் இருந்து திரும்பிய த்ரிஷா.. இதுதான் காரணமோ?

 கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய், த்ரிஷா உள்பட 'லியோ' படத்தின் குழுவினர் காஷ்மீருக்கு படப்பிடிப்புக்காக சென்ற நிலையில் தற்போது த்ரிஷா மூன்றே நாட்களில் சென்னை திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன