தனுஷ், விஜய்யை அடுத்து 'காந்தாரா' படத்தை பார்த்து வியந்த அஜித்-விஜய் நாயகி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னடத்தில் உருவான ‘காந்தாரா’ என்ற திரைப்படம் கர்நாடகாவில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வெறும் 16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 100 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பு நேற்று வெளியாகியுள்ள நிலையில் இரண்டு மொழிகளிலும் இந்த படம் மிகப்பெரிய வசூலைக் குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பதும் அதேபோல் ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து நடிகர் கார்த்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் அஜித்துடன் ’என்னை அறிந்தால்’ படத்திலும், விஜய்யுடன் ’வேட்டைக்காரன்’ படத்திலும் நடித்த அனுஷ்கா ஷெட்டி ‘‘காந்தாரா’ படத்தை பார்த்து பாராட்டி உள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘‘காந்தாரா’ திரைப்படத்தை பார்த்தேன். முழுமையாக ரசித்தேன். ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சரியப்படுத்திய படத்தின் டீம் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Watched #kantara ..totally totally loved it❤️Congratulations to whole team…u all we’re amazing??thanks for all the experience @shetty_rishab @VKiragandur @hombalefilms @HombaleGroup @gowda_sapthami @AJANEESHB @actorkishore @KantaraFilm #KantaraInCinemasNow ..don’t miss it?????? pic.twitter.com/RU68jiTnhY
— Anushka Shetty (@MsAnushkaShetty) October 16, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com