அடுத்தடுத்து இளையராஜாவை சந்தித்த தனுஷ்-ஐஸ்வர்யா!

இசைஞானி இளையராஜாவை அடுத்தடுத்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்தித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தபோது அதில் தனுஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் இளையராஜாவின் ’நாயகன்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு தாலாட்டு பாட்டு பாடிக் காண்பித்தார் என்பதும் அதனை இளையராஜாவே பாராட்டினார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று இளையராஜாவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறும்போது ’இசை மேஜிக் செய்யும் இளையராஜா அவர்களை சந்தித்து அவருடன் சில மணி நேரங்கள் இருந்தது மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார்

ஒருசிறிய இடைவெளியில் இளையராஜாவை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் மாறி மாறி சந்தித்துள்ளது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.