97 கோடி நஷ்டத்திற்கு பின் கங்கனா ரனாவத் எடுத்த அதிரடி முடிவு!
- IndiaGlitz, [Monday,May 30 2022]
கங்கனா ரனாவத் நடித்த ’தாக்கட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்தது என்றும் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 3 கோடி மட்டுமே வசூல் ஆனது என்றும் 97 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ’தாக்கட்’ படத்தின் நஷ்டத்தை அடுத்து கங்கனா ரனாவத் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த நடிகை கங்கனா ரனாவத், அடுத்ததாக முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது
இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு முழுவதும் இல்லாமல் அவரது எமர்ஜென்சி காலத்தில் நடந்த நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து இந்த படத்தை எடுக்கப் போவதாகவும் இந்த படத்தை அவரே இயக்கப் போவதாகவும் இந்த படத்திற்கு ’எமர்ஜென்சி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
கடந்த சில ஆண்டுகளாக கங்கனா ரனாவத் படங்கள் படுமோசமாக தோல்வியடைந்திருந்தாலும் அவர் இயக்கிய ’மணிகர்ணிகா’ என்ற படம் சூப்பர் ஹிட் ஆனது. எனவே தன்னுடைய படத்தை தானே மீண்டும் இயக்க கங்கனா ரனாவத் திட்டமிட்டுள்ளார்.