'டிடி ரிட்டர்ன்ஸ்' வெற்றியை அடுத்து ரிலீஸ் ஆகும் சந்தானம் அடுத்த படம்..!

  • IndiaGlitz, [Friday,August 04 2023]

நடிகர் சந்தானம் நடித்த ’டிடி ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்றும் இந்த படம் நல்ல வசூலையும் பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தானம் படம் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தற்போது அவரது அடுத்த படத்தையும் உடனடியாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சந்தானம் நடிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’கிக்’ . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக உள்ளது என்பதும் ஏற்கனவே இந்த படம் சென்சாரில் ’யூஏ’ சான்றிதழ் பெற்று விட்டதாகவும் 134 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும் தகவல் வெளியானது

இந்த நிலையில் ’டிடி ரிட்டன்ஸ்’ வெற்றியை அடுத்து உடனடியாக அடுத்த மாதம் ’கிக்’ படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும்.

சந்தானம் ஜோடியாக ’தாராள பிரபு’ படத்தில் நடித்துள்ள தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் ’கிக்’ படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராகினி திவேதி ஆகியோர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜன்யா இசையில், சுதாகர் ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்த நடிகை மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு..?

சமீபத்தில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

'குட் நைட்' தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. கிளாப் அடித்து தொடங்கி வைத்த விஜய்சேதுபதி..!

நடிகர் மணிகண்டன் நடித்த 'குட் நைட்'  திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம்  வசூல் அளவில் மிகப்பெரிய லாபத்தை பெற்றதாகவும் கூறப்பட்டது.

இயற்கை மீது இவ்வளவு அக்கறையா? பிகினி உடையில் பிரச்சாரம் செய்த நடிகை எமி ஜாக்சன்

தமிழ் சினமா ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்ற நடிகையான எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டா பதிவில் உணவு மற்றும் இயற்கை குறித்த முக்கியமான கருத்து

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அசோக் சக்ரா விருது பெற்ற பிரபலத்தின் வாழ்க்கை வரலாறா?

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர்  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

கமல் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அதிதிராவ் ஹைத்ரி..ஹீரோ யார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' என்ற படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகை அதிதிராவ் ஹைத்ரி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.