கொரோனாவுக்கு பிறகு வெளியாகும் முதல் இந்திய திரைப்படம்!
- IndiaGlitz, [Monday,April 13 2020]
சீனாவிலுள்ள வூகான் என்ற மாகாணத்தில் கொரோனா வைரஸ் தோன்றி, அந்நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலும் தற்போது பரவியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஆரம்பித்த மாகாணமான வூகானில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. அங்கு ஏற்கனவே கடைகள் பள்ளிகள், மால்கள்ஆகியவை திறந்து விட்ட நிலையில் விரைவில் சினிமா தியேட்டர்களும் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் சீனாவில் வெளியாகும் முதல் இந்திய படம் ’சூப்பர் 30’ என்று கூறப்படுகிறது. இந்த படம் விரைவில் சீனாவில் சென்சார் செய்யப்படவுள்ளதாகவும் கொரோனாவுகு பிறகு சீனாவில் வெளியாகும் முதல் இந்திய படம் இதுதான் என்றும் இந்த படத்தை தயாரித்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஷிபாசிஸ் சர்கார் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் என்ற 37 வயது கணிதமேதை ’சூப்பர் 30’ என்ற திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலம் ஒவ்வொரு வருடமும் 30 ஏழை மாணவர்களை தேர்வு செய்து நுழைவு தேர்விற்கு தயார் படுத்தி வெற்றி பெற வைக்கிறார். இந்த உண்மை கதையை மையமாக கொண்டுதான் ’சூப்பர் 30’ படம் தயாரிக்கப் பட்டுள்ளது என்பதும் ஆனந்தகுமார் கேரக்டரில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.