'கூலி' மட்டுமல்ல, இன்னொரு லோகேஷ் படத்திலும் அமீர்கான்.. மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,October 15 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' படத்தில், ஒரு முக்கிய கேரக்டரில் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமீர்கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் இன்னொரு படத்திலும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி, அது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் 'கூலி' படத்தில், அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும், அவரது சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, அமீர்கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் அடிக்கடி சந்தித்து பேசி வருவதாகவும், சமீபத்தில் கூட அமீர்கான் வீட்டில் லோகேஷ் கனகராஜ் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளிவந்த தகவலின்படி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் ஒரு சூப்பர் ஹீரோ படம் உருவாக இருப்பதாகவும், அந்த படத்திற்கு 'கஜினி 2' என்ற டைட்டில் வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

லோகேஷ், தற்போது 'கூலி' படத்தை இயக்கி வரும் நிலையில், இதற்குப் பின்னர் 'கைதி 2 ' படத்தை இயக்குவார் எனவும், அதனை அடுத்து, 2026 ஆம் ஆண்டு, அமீர்கான் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சிவாஜி போல் நடித்து கொண்டிருந்தபோதே போன உயிர்.. அதிர்ச்சி வீடியோ..!

சிங்கப்பூரை சேர்ந்த சிவாஜி அசோகன் என்பவர், சிவாஜி கணேசன் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான் உங்க டிபார்ட்மெண்டுக்கு வேலை செய்யல.. உங்களுக்கு தான்..  'வேட்டையன்' டெலிட் சீன்..!

நான் உங்க டிபார்ட்மெண்டுக்கு வேலை செய்யவில்லை, உங்களுக்கு தான் வேலை செய்கிறேன் என்று பகத் பாசில் பேசும் வசனமும், அதன் பின் ரஜினியின் ரியாக்ஷனும் உள்ள டெலிட் சீன் காட்சிகள்

தாய்க்குலங்களை மதிக்கிறேன்னு சொல்லாதீங்க.. ஜாக்குலின் ஆவேசம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று எட்டாவது நாளாக ஒளிபரப்பப்பட உள்ளது. ஒவ்வொரு நாளின் புரோமோ வீடியோக்களும் அன்றைய எபிசோடுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

சென்னைக்கு ஆபத்தா? 2025 சனிப்பெயர்ச்சி மற்றும் இயற்கை பேரழிவுகள் குறித்து ஜோதிடர் ஷெல்வி எச்சரிக்கை!

பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், வருகிற 2025-ம் ஆண்டு சனிப்பெயர்ச்சியால்

பிளான் ஏ, பிளான் பி இப்படி சொதப்பிட்டிங்களே.. ஆண்கள் அணியை வச்சு செய்த தர்ஷா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் நாளிலிருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்த சீசனில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என பிரிக்கப்பட்டது,