close
Choose your channels

'கூலி' மட்டுமல்ல, இன்னொரு லோகேஷ் படத்திலும் அமீர்கான்.. மாஸ் தகவல்..!

Tuesday, October 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' படத்தில், ஒரு முக்கிய கேரக்டரில் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமீர்கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் இன்னொரு படத்திலும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி, அது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் 'கூலி' படத்தில், அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும், அவரது சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, அமீர்கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் அடிக்கடி சந்தித்து பேசி வருவதாகவும், சமீபத்தில் கூட அமீர்கான் வீட்டில் லோகேஷ் கனகராஜ் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளிவந்த தகவலின்படி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் ஒரு சூப்பர் ஹீரோ படம் உருவாக இருப்பதாகவும், அந்த படத்திற்கு 'கஜினி 2' என்ற டைட்டில் வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

லோகேஷ், தற்போது 'கூலி' படத்தை இயக்கி வரும் நிலையில், இதற்குப் பின்னர் 'கைதி 2 ' படத்தை இயக்குவார் எனவும், அதனை அடுத்து, 2026 ஆம் ஆண்டு, அமீர்கான் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment