'கூலி' 'ஜெயிலர் 2' படங்களை அடுத்து ரஜினியின் அடுத்த படம்.. இயக்குவது இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Saturday,September 21 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், கூலி படத்தை முடித்துவிட்டு, அவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ’ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், கூலி மற்றும் ’ஜெயிலர் 2’ ஆகிய இரண்டு படங்களை முடித்த பின்னர், ரஜினிகாந்த் அடுத்ததாக பிரபல மலையாள இயக்குனர் ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

More News

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த 'மாஸ்டர்' வில்லன் நடிகர்..!

அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த வில்லன் நடிகர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

புரட்டாசி மாத சிறப்புகள் மற்றும் வழிபாடு

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. இம்மாதம் தெய்வீக சக்தி மிகுந்த மாதமாகக் கருதப்படுகிறது. காலநிலை மாற்றம் ஏற்படும் இந்த மாதத்தில், தெய்வ சிந்தனையில் ஆழ்ந்து,

கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படப்பிடிப்பில் சுதா கொங்காரா.. வைரல் புகைப்படங்கள்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக இயக்குனர் சுதா கொங்கரா தனது சமூக வலைத்தளத்தில்

கூடிய சீக்கிரம் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் தர்றேன்.. அதுவரைக்கும் Wait and Watch: 'பிரதர்' டீசர்..!

ஜெயம் ரவி நடித்த 'பிரதர்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கின்ற நிலையில், இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கே பாலசந்தர் குறித்து அவதூறு பேச்சு.. கண்டனம் தெரிவித்த  இயக்குனர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவித்த சுசித்ரா..!

மறைந்த இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாடகி சுசித்ராவுக்கு இயக்குனர் சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில், நானும் இயக்குனர் சங்கத்திற்கு