close
Choose your channels

'கூலி' 'ஜெயிலர் 2' படங்களை அடுத்து ரஜினியின் அடுத்த படம்.. இயக்குவது இந்த பிரபலமா?

Saturday, September 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது "வேட்டையன்" என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், "கூலி" படத்தை முடித்துவிட்டு, அவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ’ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், "கூலி" மற்றும் ’ஜெயிலர் 2’ ஆகிய இரண்டு படங்களை முடித்த பின்னர், ரஜினிகாந்த் அடுத்ததாக பிரபல மலையாள இயக்குனர் ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment