'குக் வித் கோமாளி' முடிந்தது, அடுத்தது பிக்பாஸ் எப்போது தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி’ நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை விஜய் டிவி நிர்வாகம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி நேற்று இறுதி நிகழ்ச்சியை 5 மணிநேரம் ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொடங்க விஜய் டிவி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் சிலர் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மற்ற போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், ஆறாவது சீசனையும் தொகுத்து வழங்குவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஒரு சிலர் நடிகர் சிம்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டாலும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்குவார் என்பதை விஜய் டிவி வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலாக உள்ளது.
ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் டி இமான் முன்னாள் மனைவி, ரக்சன், டிடி, ராஜலட்சுமி, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஆகிய 6 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் மேலும் சில போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் இறுதியில் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com