கோவையை அடுத்து தலைநகருக்கு பறந்த 'பொன்னியின் செல்வன்' டீம்.. மாஸ் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் சென்னையில் சமீபத்தில் இந்த படத்தின் ஆந்தம் பாடல் வெளியானது என்பதும், நேற்று கோவையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது கோவையை அடுத்து தலைநகர் டெல்லியில் நடைபெற இருக்கும் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள படக்குழுவினர் சென்றுள்ளனர். இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் டெல்லியில் வந்து இறங்கிய 'பொன்னியின் செல்வன்’ படக்குழுவினரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம், த்ரிஷா, சோபிதா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் விமானத்திலிருந்து இறங்கி நடந்து வரும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெளியாக இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் இந்த 10 நாட்களிலும் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் புரமோஷன் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
Majestic and stylish! Embodying the spirit of the Cholas in the 21st century.
— Lyca Productions (@LycaProductions) April 18, 2023
Here we come Delhi. Get ready! #CholaTour#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX… pic.twitter.com/vLD6861V2V
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments