முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்து எது தெரியுமா? கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,March 27 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது அந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியில் தீவிரமாக உள்ளார். அவரது கட்சியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினராக சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த கமல் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று பொன்னேரியில் தனியார் கல்லூரி  ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார். அதில், நான் தமிழக முதல்வரானால் எனது முதல் கையெழுத்து லோக் ஆயுக்தாவாகதான் இருக்கும்' என்று கேள்வி ஒன்றுக்கு கமல் பதிலளித்தார். ஏற்கனவே ஒருசில அரசியல்வாதிகள் இதே வாக்குறுதியை கொடுத்தனர் என்பதும் ஆனால் அந்த அரசியல்வாதிகள் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கல்லூரி விழாவில் கமல் மேலும் கூறியபோது, 'மாணவர்களை அரசியல்வாதியாக இருக்க சொல்லவில்லை; அரசியல் புரிதல் இருக்க வேண்டும் என்றும்  நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு கூட, பிறருக்கு இல்லை' என்றும் நம் பிள்ளைகள் படிப்பபை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறினார்.

More News

நேற்று ஸ்டாலின் பழமொழிகள், இன்று அமித்ஷா உளறல்கள்: நெட்டிசன்களுக்கு கொண்டாட்டம்

கடந்த இரண்டு நாட்களாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 'யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே' என்றும் பூனை மேல் மதில் போல் என்றும் பழமொழிகளை மாற்றி சொன்னதால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானார்.

விஜய்யின் இந்த திடீர் மாற்றம் ஏன் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து தற்போது அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்திக் நரேனிடம் நம்பிக்கை மோசடி செய்தது யார்? டுவீட் ஏற்படுத்திய பரபரப்பு

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய முதல்படமான 'துருவங்கள் 16' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.

டேட்டா லீக் எதிரொலி: ஃபேஸ்புக்கில் இருந்து விலகினார் பிரபல நடிகர்

சமீபத்தில் ஃபேஸ்புக் பயனாளிகளின் டேட்டாக்கள் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ச் அனாலிட்டிக்ஸ் நிறுவனத்தால் திருடப்பட்டு அவை அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாகவும்,

தமிழ் நடிகைக்கு சாமியார் அளித்த பரிசு

இந்தியாவின் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் பேரணி ஒன்றை நடத்தினார்.