சிரஞ்சீவி படத்தை அடுத்து மேலும் ஒரு படத்தை மிஸ் செய்த த்ரிஷா?

  • IndiaGlitz, [Tuesday,May 19 2020]

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சார்யா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் திடீரென அந்த படத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட கேரக்டர் குறித்த சர்ச்சை காரணமாக அந்த படத்திலிருந்து த்ரிஷா விலகிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் தான் சிரஞ்சீவி படத்திலிருந்து த்ரிஷா விலகியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் த்ரிஷா மேலும் ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படத்தை மிஸ் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், மலையாளம் திரையுலகில் பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடித்து வரும் ’ராம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சில காட்சிகளில் இந்தியாவில் படமாக்கப்பட்டபின் அடுத்த கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.

 

ஆனால் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவால் லண்டன் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த கொரோனா பிரச்சனை எப்போது முடியும் என்று தெரியாததால் இந்த படத்திற்காக பல மாதங்கள் காத்திருக்க விரும்பாத ஜீத்துஜோசப்,  இந்த படத்தை டிராப் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இயக்குனர் ஜீத்துஜோசப் கூறுகையில், ‘ராம் படத்தின் பணிகள் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த படம் கைவிடப்படவில்லை. கொரோனா பாதிப்பு முடிந்தவுடன் மீண்டும் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். 

More News

தனிமைப்படுத்தப்பட்ட 'பேட்ட' நடிகருக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய மனைவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் சமீபத்தில் தனது சொந்த கிராமத்திற்கு சென்றதால் 14 நாட்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டார்

பூமியில் மட்டுமல்ல; சூரியனிலும் லாக்டவுன்தான்!!! கடும் எச்சரிக்கை விடுக்கும் நாசா!!!

கொரோனா பாதிப்பினால் உலகமே தலைகீழாக மாற்றப்பட்டு இருக்கிறது.

அடுத்த வருடம் இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கும்??? ஆருடம் சொல்லும் பொருளாதார வல்லுநர்கள்!!!

இதுவரை இந்தியாவில் நிகழ்ந்த பொருளாதார மந்தத்தை விடவும் 2021 இல் அதீத மந்தநிலை ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை கோல்ட்ஸ்மேன் பொருளாதார வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்

கொரோனா சிகிச்சை: மிகவும் நம்பப்பட்ட Remdesivir குறைந்த இரத்த அழுத்தத்தை தூண்டுகிறது!!! அதிர்ச்சி தகவல்!!!

அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சைக்கு Remdesivir மருந்தைப் பயன்படுத்தி அதிக நோயாளிகளை குணப்படுத்தியது.

ஜிகா, எய்ட்ஸை துரத்தி அடித்த ஒருநாடு, கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கிக் கொண்டது எப்படி??? கள நிலவரம்!!!

அரசமைப்பு உருவாகாத காலக்கட்டத்தில் ஒரு பழமொழி சொல்லப்படுவது உண்டு. ”அரசன் அன்றே கொல்வான்