சீனாவை அடுத்து பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியாவை சுற்றி வளைக்கும் அண்டை நாடுகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று முன்தினம் நள்ளிரவு லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 வீரர்கள் பலியாகி இருப்பதாக கூறப்பட்டாலும் இதுகுறித்து சீன அரசு மற்றும் சீன ராணுவம் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்திய சீன எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சீனா எல்லையில் ஒரு பக்கம் பதட்டம் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் திடீரென பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நவ்காம் என்ற பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததால் இந்திய பாகிஸ்தான் எல்லையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே சமீபத்தில் நமது அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளம் இந்திய பகுதியையும் சேர்த்து புதிய வரைபடத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் சிஏஏ சட்டத்திற்குப் பின்னர் வங்கதேசம் இந்தியா மீது கடும் அதிருப்தியில் உள்ளது
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்தியாவின் எதிரி நாடுகள் இல்லை என்றாலும் அவை நெருங்கிய நட்பு நாடுகள் என்றும் சொல்ல முடியாத வகையில் உள்ளன. எனவே ஒரே நேரத்தில் சீனா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகள் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நெருக்கடிகளை மத்திய அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout