சீனாவை அடுத்து இன்னொரு நாட்டில் ரிலீஸ் ஆகும் ‘மகாராஜா’.. குவியும் வசூல்..!

  • IndiaGlitz, [Sunday,December 01 2024]

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான ’மகாராஜா’ திரைப்படம், கடந்த ஜூன் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது. இந்த படத்தின் பட்ஜெட் வெறும் ரூ.20 கோடி என்று கூறப்படும் நிலையில், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் என்பது தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் இந்த படம் சீனாவில் வெளியானது. சுமார் 40 ஆயிரம் திரைகளில் சீன மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. சீனாவிலும் இப்படம் மிகப்பெரிய வசூலை பெற்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சீனாவை அடுத்து ஜப்பானிலும் இந்த படத்தை வெளியிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஜப்பான் மொழியில் டப் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் ஜப்பான் மொழியில் வெளியாகும் தேதி குறித்து மகாராஜா பட குழுவினர் அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்த படத்தை அமீர்கான் ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியுள்ளார். இதன் மூலம் விரைவில் இந்த படம் ஹிந்தியிலும் உருவாக உள்ளது.