2 வார இடைவெளியில் அமலாபாலின் இன்னொரு படம் ரிலீஸ்: ஓடிடியா? திரையரங்கா?

  • IndiaGlitz, [Saturday,August 06 2022]

நடிகை அமலாபால் நடித்த ’கேடவர்’ என்ற திரைப்படம் வரும் 12ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அமலாபால் நடித்த இன்னொரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படங்களில் ஒன்று ’அதோ அந்த பறவை’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த பிப்ரவரி மாதமே ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் ஆகஸ்டு 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமலாபால் நடித்த ’கேடவர்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் கழித்து அவர் நடித்த இன்னொரு திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. ‘அதோ அந்த பறவை’ என்ற திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பதும் இந்த படத்திற்காக அமலாபால் தற்காப்புக் கலையை பயின்று சண்டைக்காட்சிகளில் டூப் இன்றி நடித்ததாகவும் கூறப்பட்டது.

அமலாபால், ஆசிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையில், சாந்தகுமார் ஒளிப்பதிவில் ஜான் ஆபிரஹாம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜோன்ஸ் என்பவர் தயாரித்துள்ளார்.