பாலிவுட்டை அடுத்து குஜராத்தி சினிமாவில் எண்ட்ரி ஆகும் நயன்தாரா!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் ஷாருக்கான் நடிக்கும் ‘லயன்’ என்ற திரைப்படத்தில் நயன்தாராவை நாயகியாக்கி இயக்குனர் அட்லி அவரை பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாலிவுட் படத்தில் எண்ட்ரியான நயன்தாரா, குஜராத்தி சினிமாவிலும் என்ட்ரி ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து உருவாக்கிய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பல தமிழ் திரைப்படங்கள் தயாராகி வருகின்றன என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது குஜராத்தி சினிமா ஒன்றை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
தேசிய விருது பெற்ற மணிஷ் சைனி என்பவர் இயக்கத்தில் மல்ஹர் தக்கார் மற்றும் மோனல் கஜார் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது இது குறித்த அறிவிப்பை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் நயன்தாரா நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Happy to announce our first entry into Gujarati Cinema wit their SuperStar #MalharThakar @MalharThakar & @Gajjarmonal directed by national award winner #ManishSaini #ShubhYatra Wil be the first film from @Rowdy_Pictures looking forward to a continuous consistent journey here??❤️ pic.twitter.com/BuIgy6JwY4
— Vignesh Shivan (@VigneshShivN) February 26, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com