பாலிவுட்டை அடுத்து குஜராத்தி சினிமாவில் எண்ட்ரி ஆகும் நயன்தாரா!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் ஷாருக்கான் நடிக்கும் ‘லயன்’ என்ற திரைப்படத்தில் நயன்தாராவை நாயகியாக்கி இயக்குனர் அட்லி அவரை பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலிவுட் படத்தில் எண்ட்ரியான நயன்தாரா, குஜராத்தி சினிமாவிலும் என்ட்ரி ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து உருவாக்கிய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பல தமிழ் திரைப்படங்கள் தயாராகி வருகின்றன என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது குஜராத்தி சினிமா ஒன்றை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

தேசிய விருது பெற்ற மணிஷ் சைனி என்பவர் இயக்கத்தில் மல்ஹர் தக்கார் மற்றும் மோனல் கஜார் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது இது குறித்த அறிவிப்பை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் நயன்தாரா நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

More News

எனது படத்தில் விஜயகாந்த் நடிப்பது உண்மை தான்: மீண்டும் உறுதி செய்த இயக்குனர்

விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படத்தில் விஜயகாந்த் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை பிரேமலதா விஜயகாந்த் மறுத்த நிலையில் தற்போது விஜயகாந்த் நடிப்பது உண்மைதான் என இயக்குனர்

திடீரென பெங்களூர் சென்று அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்: வைரல் வீடியோ

தளபதி விஜய் திடீரென பெங்களூர் சென்று மறைந்த பிரபல நடிகருக்கு அஞ்சலி செலுத்திய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

உக்ரைனை ரஷ்யாவே ஆளுமா? பதற வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு!

உக்ரைனில் போர்ப்பதற்றம் அதிகரித்து இருக்கும் சூழலில் ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது, அதிபர் புடினே உலகை

100 வருட தமிழ் சினிமாவில் 'வலிமை' மட்டுமே செய்த சாதனை: திருப்பூர் சுப்பிரமணியம்

100 வருட தமிழ் சினிமாவில் 'வலிமை' மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

'விக்ரம்' படப்பிடிப்பு நிறைவு விழாவில் சகலகலா வல்லவன் கொண்டாட்டம்!

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.