வழக்கம்போல் டைட்டில் வின்னருக்கு ஒன்றுமே இல்லை.. ஆனால் தட்டி தூக்கிய மாயா, பூர்ணிமா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு திரையுலகில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டாலும் ஒரு சில போட்டியாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் மற்ற போட்டியாளர்களுக்கு முன்பிருந்த நிலைமையை விட மோசமாகத்தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
குறிப்பாக இதுவரை பிக் பாஸ் ஏழு சீசன்கள் நடந்துள்ள நிலையில் 7 சீசன்களின் டைட்டில் வின்னர்களுக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆரவ், ரித்விகா, முகின் ராவ், ராஜூ, ஆரி, அசீம் மற்றும் அர்ச்சனா ஆகியோர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் டைட்டில் பட்டம் கிடைக்கவில்லை என்றாலும் ஹரிஷ் கல்யாண், யாஷிகா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட சிலருக்கு ஓரளவு வாய்ப்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்தாண்டு முடிவடைந்த ஏழாவது சீசனின் டைட்டில் வின்னராக அர்ச்சனா இருந்தபோதிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாயா, பூர்ணிமா ஆகிய இருவருக்கும் தற்போது திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. ஏற்கனவே பூர்ணிமா அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தட்டி தூக்கியுள்ள நிலையில் தற்போது மாயாவுக்கும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
’ஃபைட்டர் ராஜா’ என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக மாயா நடிக்கிறார் என்பதும் ஹீரோவாக ராம்ஸ் என்பவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் மாயாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com