close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த படம் 'நான்ஈ 2'?

Saturday, September 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம், தென்னிந்தியாவின் அதிக வசூல் செய்த படம் போன்ற பல பெருமைகளை பெற்ற 'பாகுபலி' படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி, 'பாகுபலி 2' படத்தை இயக்குவதில் பிசியாக உள்ளார். ஏற்கனவே 40% படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பெரும்பாலானோர்களின் கேள்வி எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த படம் என்ன? என்பதுதான். மகேஷ்பாபு படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கவிருப்பதாகவும், ஜூனியர் என்.டி.ஆர்தான் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த ஹீரோ என்றும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் எஸ்.எஸ்.ராஜமவுலி அடுத்ததாக 'நான் ஈ' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று வெளியான நானி நடித்த 'பலே பலே மொகதீவோ' என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் நானியை மீண்டும் பயன்படுத்த இதுவே நல்ல தருணம் என எஸ்.எஸ்.ராஜமவுலி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் 'மகாபாரதம்' கதையை பிரமாண்டமாக இயக்கவும் எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் ஒரு மெகா திட்டம் உள்ளது. 'பாகுபலி 2' முடிந்தபின்னர்தான் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த படம் குறித்த தகவல் உறுதியாக தெரியும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment