'அயலான்', 'ஜிகர்தண்டா 2'வை தீபாவளி ரிலீஸில் இணைந்த இன்னொரு பிரபல இயக்குனரின் படம்..!

  • IndiaGlitz, [Saturday,May 20 2023]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா, சூர்யா நடிப்பில் ’வணங்கான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் அந்த படம் எதிர்பாராத சில காரணங்களால் கைவிடப்பட்டது. இதையடுத்து அதே படத்தை சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடிப்பில் தற்போது பாலா உருவாக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மகாபலிபுரம் அருகே தொடங்கியுள்ளதாகவும் 15 நாள் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சூர்யா நடிப்பில் உருவான ’வணங்கான்’ படத்தின் காட்சிகள் அனைத்தும் இந்த படத்தில் இடம்பெறும் என்றும் கதையில் மட்டுமின்றி எந்த ஒரு காட்சியிலும் ஒரு சிறிய மாற்றம் கூட இல்லை என்றும் பாலாவின் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.

பாலாவின் சொந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தை அவர் வெறித்தனமாக இயக்கி வருகிறார் என்பதும் தனது திறமையை இந்த படத்தின் மூலம் நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வெறியுடன் அவர் பணிபுரிந்து வருகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே தீபாவளி ரிலீஸ் போட்டியில் ’அயலான்’ மற்றும் ஜிகர்தண்டா 2’ ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ’வணங்கான்’ படத்தையும் தீபாவளி அன்று வெளியிட பாலா திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், இந்த படத்தின் ரிலீஸ் செய்து குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.