ஏ.ஆர்.முருகதாஸ், அட்லியை அடுத்து பாலிவுட் செல்லும் லோகேஷ் கனகராஜ்.. ஹீரோ இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Monday,August 19 2024]

தமிழ் திரை உலகை சேர்ந்த பிரபல இயக்குனர்கள் பாலிவுட்டில் வெற்றி படங்களை இயக்கி வரும் நிலையில் அடுத்த கட்டமாக லோகேஷ் கனகராஜ் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லி, ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படத்தை இயக்கினார் என்பதும் அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது தெரிந்தது.

அதேபோல் பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், சல்மான்கான் நடிக்க இருக்கும் ’சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அட்லி, ஏஆர் முருகதாஸ் ஆகியோர்களை அடுத்து லோகேஷ் கனகராஜ் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

ரஜினியின் ‘வேட்டையன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கலா?

ஏற்கனவே அக்டோபர் 10ஆம் தேதி சூர்யாவின் ’கங்குவா’  திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே நாள்களில் ‘வேட்டையன்’

குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 : துலாம் முதல் மீனம் வரை ! - ஆச்சார்யா ஹரிஷ் ராமன்

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், அக்டோபர் 10 முதல் 2025 பிப்ரவரி 4 வரை நடைபெற உள்ள குரு வ

குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 : மேஷம் முதல் கன்னி வரை!

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், அக்டோபர் 10 முதல் 2025 பிப்ரவரி 4 வரை நடைபெற உள்ள குரு வக்ர பெயர்ச்சியின் பலன்களை

பிரபல அரசியல் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்.. கூட்டணிக்கு அச்சாரமா?

பிரபல அரசியல் தலைவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வளவு வயசானா என்ன? சிங்கம் எப்போதும் சிங்கம் தான்: விஜய்யின் 'கோட்' டிரைலர்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்'  திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே படத்தை உடனே பார்க்க வேண்டும்