அட்லி, ஏஆர் முருகதாஸை அடுத்து பாலிவுட் செல்லும் வெங்கட் பிரபு.. மாஸ் நடிகர் தான் ஹீரோ..!
- IndiaGlitz, [Sunday,December 29 2024]
தமிழ் திரை உலகை சேர்ந்த இயக்குனர்கள் பாலிவுட்டில் படங்களை இயக்கி வரும் நிலையில், அந்த பட்டியலில் தற்போது வெங்கட் பிரபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் என்ற திரைப்படத்தை தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய நிலையில், இந்த படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்பட்டது. அதேபோல், சல்மான்கான் நடித்து வரும் சிக்கந்தர் என்ற படத்தை தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அட்லி, ஏ.ஆர். முருகதாஸை அடுத்து வெங்கட் பிரபு பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கிய சமீபத்திய ‘கோட்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அவருடைய அடுத்த படத்தில் அக்ஷய்குமார் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. வெங்கட் பிரபுவின் கதை அக்ஷய்குமாருக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும், இதனை அடுத்து கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெங்கட் பிரபு மற்றும் அக்ஷய்குமார் இணையும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.