'அரண்மனை' சீரீஸ் போதும்.. சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்கும் சுந்தர் சி..!

  • IndiaGlitz, [Tuesday,May 07 2024]

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ படத்தின் நான்காம் பாகம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 34 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’அரண்மனை’ பாடத்தில் நான்காம் பாகம் வெற்றி பெற்றால் ’அரண்மனை’ ஐந்தாம் பாகம் குறித்து யோசிப்பதாக சுந்தர் சி கூறியிருந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

’அரண்மனை’ படத்தின் நான்காம் பாகத்தை அடுத்து அவர் ’கலகலப்பு’ படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஆரம்ப கட்ட பணியை அவர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

’கலகலப்பு’ படத்தின் முதல் பாகத்தில் விமல், சிவா, ஓவியா, அஞ்சலி நடித்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. இதில் விமலுக்கு பதிலாக ஜீவா, ஜெய் மற்றும் சிவா நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கலகலப்பு’ படத்தின் மூன்றாம் பாகத்தை சுந்தர் சி உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதில் முதல் பாகத்தில் நடித்த விமல் மற்றும் சிவா ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல் ஓவியா, அஞ்சலி நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும், முதல் இரண்டு பாகங்கள் போலவே முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட படமாக ‘கலகலப்பு 3’ இருக்கும் என்று கூறப்படுகிறது.

'கலகலப்பு' படத்தின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மூன்றாம் பாகமும் அதேபோல் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.