ஏஆர் ரஹ்மான் வெளியே.. விஜய் சேதுபதி உள்ளே.. சூர்யா அடுத்த படத்தின் மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,December 11 2024]

சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் விலகியதை தொடர்ந்து சாய் அபிநயங்கர் என்ற இசையமைப்பாளர் அறிவிக்கப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், சூர்யாவின் 45-வது படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகி இருக்கும் நிலையில், தற்போது விஜய் சேதுபதி இந்த படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 45’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிய நிலையில், முதல் கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அடுத்த கட்டமாக, இந்த படத்தின் ஒரு பவர்ஃபுல்லான முக்கிய கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்த பேட்டியில் இனிமேல் வில்லன் வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய நிலையில், ’சூர்யா 45’ படத்தில் ஒருவேளை விஜய் சேதுபதி நடித்தாலும், அது வில்லன் வேடமாக இருக்காது என்றும், சூர்யாவுக்கு இணையாக ஒரு வேடமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ஷாருக்கான் உள்பட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த விஜய் சேதுபதி, அடுத்ததாக சூர்யாவுடனும் இணைய போகிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

தனுஷின் கனவு திரைப்படம் டிராப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி..!

தனுஷ் நடிக்க இருந்த அவரது கனவு திரைப்படம் டிராப் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் ஒரு ரசிகர் மரணம்.. 'புஷ்பா 2' படத்திற்கு என்ன ஆச்சு?

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் ரிலீஸ் ஆன அன்று கூட்ட நெரிசல் காரணமாக பெண் ஒருவர் பலியான நிலையில், நேற்று திரையரங்கில் இந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்த

இன்னொரு படத்திற்கும் வாய்ப்பு.. 'சூர்யா 45' இசையமைப்பாளருக்கு குவியும் படங்கள்..!

சமீபத்தில் சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தின் இசையமைப்பாளராக அபிநயங்கர் என்பவர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு இன்னொரு பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடவுளே அஜித்தே.. ரசிகர்களுக்கு அஜித் விடுத்த வேண்டுகோள்..!

அஜித்தை அவரது ரசிகர்கள் கடந்த சில நாட்களாக 'கடவுளே அஜித்தே' என்று கூறிவரும் நிலையில் அவ்வாறு தன்னை அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்து

முருகன் வழிபாடு: வாழ்க்கை மாற்றும் ரகசியங்கள்!

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் டாக்டர் சம்பத் சுப்பிரமணி அவர்கள் முருகன் வழிபாட்டின் ஆழமான அர்த்தத்தைப் பற்றி பேசுகிறார்.