அடுத்தடுத்து விஜய் இயக்குனர்களை குறி வைக்கும் சிவகார்த்திகேயன்.. அடுத்த இளைய தளபதியா?

  • IndiaGlitz, [Monday,February 26 2024]

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே விஜய் படங்களை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக இன்னொரு விஜய் பட இயக்குனரையும் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு திரை உலகில் இருந்து விலகிவிடுவார் என்று கூறப்படுவதை அடுத்து அவருடைய இடத்தை பிடிக்க கடும் போட்டி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் விஜய் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்றும் விஜய்யே மீண்டும் வந்து நிரப்பினால் தான் உண்டு என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் விஜய்யின் இடத்தை பிடிக்கவும், இளைய தளபதி பட்டத்தை பெறவும் முயற்சித்து வருவதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது. அதை உறுதி செய்வதை போல் அடுத்தடுத்து விஜய் பட இயக்குனர்களின் படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட்டாகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் நடித்த ’துப்பாக்கி’ ’கத்தி’ ‘சர்கார்’ போன்ற படங்களை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஒரு படம் நடிக்க ஒப்பு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெங்கட் பிரபுவை சந்தித்த சிவகார்த்திகேயன் அவரிடம் கதை கேட்டு ஆச்சரியப்பட்டதாகவும் ’கோட்’ படத்தின் கதையை இந்த கதை சிறந்தது என்று வெங்கட் பிரபு கூறியதாகவும் ’கோட்’ படத்தை முடித்து உடன் இருவரும் இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து விஜய் படம் இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்த இளையதளபதி ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.